Welcome to sivaratnamboc.com

எனது பெயர் நடராஜா சிவரட்ணம். நான் இலங்கையின் வடபால் அமைந்துள்ள சாதனைகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் கொண்ட வல்வெட்டித்துறை நகரின் ஆதிகோவிலடி எனும் ஒரு கிராமத்தில் 25.02.1950ம் ஆண்டில் பிறந்தேன். எனது தந்தையார் பெயர் வடிவேல் நடராஜா. தாயாரின் கன்னிப்பெயர் சின்னையா வள்ளியம்மாள். எமது பெற்றோருக்கு 7 குழந்தைகள். மூத்தவராகிய ஒரேயொரு பெண் சகோதரியுடன் பிறந்தோம். இதில் எனது ஒரு மூத்த சகோதரன் சிறு வயதிலேயே அகாலமரணமாகி விட்டார். நான் பிறந்த இவ் ஆதிகோவிலடியில் ஏறக்குறைய 100 வீதமானவர்களும் தமது ஏழ்மையின் நிமித்தம் சுயதொழிலையே புரிந்து வந்தனர். இதனால் பிள்ளைகளை கல்வியில் நாட்டம் கொள்ள ஊக்கமளிக்காது பதுமவயது ஆண்குழந்தைகளையும் தமது தொழிலிலேயே ஈடுபடுத்தி தம் குடும்பச் செலவுகளை சமாளிக்க வேண்டியிருந்தது.

இதற்கு விதிவிலக்காக எனது பெற்றோர் எம்மை கல்வியில் ஊக்குவித்தனர். இதன் விளைவாக நான் எனது கல்வியை G.C.E O/L வரை தொடரக்கூடியதாக இருந்தது. இருந்தபோதும் எனக்கு சரியான வழிகாட்டல் இல்லாதிருந்தமையால் G.C.E O/L தரத்தில் 3 துறைகளிலும் அதாவது சாதாரண தரத்தில் அப்போ நிலவிய கலை (Arts)இ வர்த்தகம் (Commerce)இ விஞ்ஞானம்(Science) ஆகியவற்றில் சமஸ்கிருதம் உட்பட 21 பாடங்களில் சித்தி பெற்று இம் மூன்று துறைகளிலுமே G.C.E A/L தரத்திற்கு தகுதியடைந்தேன். (அபிமானிகளே இதுபற்றிய சந்தேகங்களை எனது சுயசரிதையில் காணலாம்.) மேலும்